Monday, August 24, 2009

இறைவன் தோன்றியது இப்படியாக இருக்குமோ?

இறைவன் எப்படி உருவானார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை ஆகினும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஞானத்தால் பல தேடுதல்கள் மூலம் கடவுள் எப்படி உருவாகியிருக்கலாம் என்று நான் ஆராய்ந்து அறிந்தவற்றை இங்கு பதிகிறேன்.
.
அறிவியலார் சொல்லும் எந்த கருத்துக்களும் மறுப்பதற்கில்லை! அவர்கள் சொல்லும் எல்லா உண்மைகளையும் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். பெருவெடிப்பு கொள்கை மூலம் அண்டங்கள் உருவானது எனபதும் உண்மையாகவே இருக்கட்டும்! டார்வின் தியரிப்படி ஒருசெல் உயிரியிலிருந்து உயிரினகள்தோன்றி இறுதியில் குரங்காகி, குரங்கின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் வந்தான் என்பதும் ஏற்றுக்கொள்ளலாம்!
.
இந்த மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் நாம் கண்ணுக்கு தெரியாத தெய்வங்கள் என்றும் அந்த தெய்வங்களுக்கு பின்வந்த ஒரு மிக உன்னதமான பரிணாம வளர்ச்சிதான் இறைவன் என்றும் நான் கருதுகிறேன் .எப்படி மனிதன் பரிணாமவளர்ச்சியில் விலங்குகளுக்கு பிறகு உருவாகியிருந்தும், தனக்குள்ள விசேஷ பகுத்தறிவு மற்றும் ஆற்றலால் எல்லா உயிரினங்களையும் தனக்கு கீழ் அடக்கி ஆள்கிறானோ அதுபோல், தெய்வங்கள் தங்களுக்குள்ள மனிதனைவிட விசேஷமான தகுதியால் மனிதர்கள் எல்லோரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்று நான் கருதுகிறேன் பரிணாம வளர்ச்சியின் தற்ப்பொதைய சூப்பர் ஹீரோவாகிய இறைவன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
.
மனிதர்கள் இன்று தங்களைபோல ரோபோக்களை உருவாக்க அறிவியியல் முறைப்படி முயன்று வருகின்றனர் ஆனால் இறைவன் என்னும் விசேஷ அறிவுள்ளவர் தோன்றும் போதே , மனிதனை உருவாக்கும் முறை மற்றும் அனேக விசேஷ வல்லமைகளை பெற்றிருக்கலாம். அதன் மூலம் அண்டவேளிகளுக்கு சென்று அங்கு தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டு அமர்ந்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். ஆனால் தற்ப்போது நாம் இருக்கும் பூமியானது முழுக்க முழுக்க இறைவனால் வடிவமைக்கப்பட்டது ஏனெனில் முதல் முதலில் தோன்றிய பூமி பலமுறை முற்றிலும் அழிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கருதுகிறேன்.
.
உயிரினங்கள் எல்லாமே ஓரறிவில் இருந்து ஆரறிவுவரை படிப்படியாக வளர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு அறிவு வளரும் போதும் அவ்வுயிருக்கு ஒவ்வொரு விசேஷ திறமை கிடைத்திருக்கிறது! ஐந்தாவது அறிவிலிருந்து ஆறாவது அறிவு வந்தபோது மனிதன் அதை பயன்படுத்தி எல்லா உயிரினங்களை விட மிகஉயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டான்! இதைவிட மேலான எழாவது எட்டாவது அறிவு கிடைத்தபோது, அந்த மனிதர்களுக்கு அதைவிட அதீத வல்லமை கிடைத்து. யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து நினைத்த நேரம் தோற்றமளிக்கும் விசேஷ வல்லமை போன்றவை பெற்றனர். இவர்களே தெய்வங்கள் ஆனார்கள் வேறு எவ்விதத்தில் ஆராய்ந்தாலும் குற்றம் இறைவன் மேல் வருகிறது. இறைவனை நான் எவ்விதத்திலும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஏனெனில் அவர் யாரையும் மனபூர்வமாக சோதித்து தண்டிப்பவர் அல்ல!
.
மனிதசக்திக்கு மேன்பட்ட சக்திகொண்ட இறைவன் என்பவர் இருக்கிறார் என்பதை அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, அனுபவபூர்மவாக எந்த சந்தேகமும் இன்றி அறிந்துகொண்டுவிட்டேன். அவரை நம்முடைய இந்த கண்ணால் காணத்தான் முடியவில்லை. அத்தோடு தெய்வங்கள் என்று மக்களாம் வழிபடப்படும் எல்லா சாமிகளும் உண்மையில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களே என்னோடு பேசியதன் மூலம் அறிந்துகொண்டுள்ளேன். அதிலும் சந்தேகம் எதுவும் இல்லை. ஆகினும் அறிவியல் கருத்துகள் அனைத்தும் ஏறக்குறைய நிரூபிக்கப்பட்டுவிட்டவைகளே! அவைகளையும் இல்லை என்று ஒதுக்க முடியாது. எனவே கீழ்க்கண்ட ஏதாவது ஒரு முடிவுக்கு நாம் நிச்சயம் வரவேண்டியுள்ளது.
.
ஆன்மீக வாதிகள் சொல்வதுபோல் இறைவன் என்பவர் முதலில் தானாக தோன்றினாள் அவரால உலகம் மற்ற்யும் எல்லாமே உருவாக்கப்பட்டது அல்லது
அறிவியல் சொல்வதுபோல் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றினாள் அவனை அடுத்து இறைவனும் தோன்றினார் அவர்களால் உலகம் மற்றும் எல்லாமே மாற்றி அமைக்கப்பட்டது.
.
இதில் எதாவது ஒரு கருத்தை நிச்சயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.ஒரு ஐந்தறிவு படைத்த குரங்கு மனிதனை பார்க்கவேண்டும் என்று கருதினால், அதுதான் மனிதனை தேடி அவன் இருக்கும் இடத்தில் வந்து பார்க்கவேண்டும். தான் இருந்த இடத்தில் இருந்துகொண்டு மனிதன்தான் என்னை வந்து பார்க்கவேண்டும், எனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று கருதினால் அது நடக்காது. ஒரு மனிதனுக்கு அது இருக்கும் இடத்தை தேடிப்போய் அதன் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. அதுபோல் நம்மைவிட அதிக வல்லமை கொண்ட தெய்வங்களை நாம் சிரத்தையுடன் தேடினால்தான் நம்மால் கண்டடைய முடியும். அவர்கள் நம்முன் வந்து நின்று, நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எவ்வகையிலும் சரியானதல்ல!
.
தேடினவர்கள் எல்லோரும் நிச்சயம் கண்டடைவார்கள்! சிரத்தையுடன் தேடி இறைவனை அறிய விரும்பாமல், இறைவன் என்று ஒருவரும் இல்லை என்று கூறுவது ஞானமான வார்த்தை அல்ல என்றே நான் கருதுகிறேன்

அறிவியலே அழிவுக்கு வழிகாட்டி!

அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்திருந்தாலும் இறுதியில் மனித குலத்தை அடியோடு அழிக்க போவதும் அறிவியல்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்காது என்றே நான் கருதுகிறேன்!
.
அறிவியல் முன்னேற்றத்தால் அணுகுண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு அவையாவும் சகமனிதர்களை சவகிடங்குக்கு அனுப்பவே பயன்பட்டு வருகின்றன! இதுபோன்ற குண்டுகளை எவன் கண்டுபிடித்தான்? ஏன் கண்டுபிடித்தான்? இதுபோன்ற குண்டுகளால் உயிரிழக்கும் ஒவ்வொரு உயிரின் மரணத்துக்கும் அந்த அறிவியல்காரனும் ஒரு போருப்பாளிதானே?
ஒருபுறம் தீவிரவாதிகள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு கொல்லுகின்றனர் இன்னொருபுறம் சிலர் உலகின் காவலர்கள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு குண்டுபோட்டு கொல்கிறார்கள்! ஆனால் சாவது என்னவோ சகமனிதர்கள்தான்!
.
எத்தனையோ விதமான அழிக்கும் ஆயுதங்களை கண்டுபிடித்த அறிவியலுக்கு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பகையை கொல்ல ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியவில்லையே!!! அது அறிவியலுக்கு மிகபெரிய தோல்வியே!
.
எந்த ஒரு அறிவியல் பொருட்களும் இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக மனிதன் வாழ்ந்த காலங்கள் வரலாற்றில் உண்டு! இயற்க்கை என்பது ஒரு பொக்கிஷம்! நாம் சிறப்பாக வாழ தேவையான எல்லாமே குறைவற்று அமைத்ததுதான் உலகம்! அதில் திருப்தியடையாத, அதை அளவோடு அனுபவித்து வாழாமல் இயற்க்கை சமன்பாட்டை அறிவியல் என்னும் பேரால் கெடுக்கும் பேராசை பிடித்த அதிமேதாவிகளால்தான் இன்று உலகம் அழிவை நோக்கி பயணிக்கிறது!
.
"எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு" என்ற வார்த்தையின்படி இன்று மனிதனின் சொகுசு வாழ்க்ககைக்கு பயன்படும் அறிவியல் ஒருநாள் மனிதனை பொசுக்கிவிடும், அதை அந்த அறிவியலாலேயே கூட தடுக்க முடியாமல் போய்விடும் என்றே நான் கருதுகிறேன்!
.
உதாரணமாக ஒருவர் நாலு நாள் நல்ல சொகுசு வாழ்க்கையை நமக்கு கொடுத்து ஐந்தாவது நாள் நம்மை கொன்றுபோட்டால் அவர் நல்லவரா கெட்டவரா என்ற கோணத்தில் பார்க்கிறேன்! கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த மனிதனுக்கு சொகுசு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது அறிவியல்! இன்று அனேக மனிதர்களை கொன்று குவிப்பதும் அறிவியல்தான்! இயற்கையாய் நடக்கும் மரணங்களை விட செயற்கை அறிவியல் சாதனங்களால்தான் அனேக மரணங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன!
.
அறிவியல் ஆயிரம் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆயிரத்து ஒண்ணாவதாக எதாவது ஒரு புதியதாக நோய் வந்துகொண்டுதான் இருக்கிறது! இயற்கையை மனிதன் ஒருநாளும் வெல்ல முடியாது! எல்லா நோயையும் ஒழித்துவிட்டோம் என்று அறிவியலால் ஒருநாளும் சொல்லமுடியாது! பின் அதனால் என்ன பெரிய பயன்? நேற்று வேற்றொரு பெயரில் ஆளை கொன்ற நோய் இன்று வேறொரு பெயரில் கொல்கிறது அவ்வளவுதானே? ஐம்பது வருடத்துக்கு முன் அபூர்வமாக இருந்த அறுவை சிகிச்சை இன்று ஆளாளுக்கு செய்துகொள்ளும் அவலநிலை ஏன் உருவானது? அறிவியலால் ஏற்றப்பட்ட சுற்றுசூழல் மாசுதான் அதன் அடிப்படை காரணம் என்று நான் கருதுகிறேன்!
.
இயற்க்கை தன் சமநிலையை தானாகவே காத்துக்கொள்ளும். மனிதனின் உதவி அதற்க்கு தேவையில்லை! ஏனெனில் மனிதனும் இயற்கையின் ஓர் அங்கமே. ஆனால் மனிதன் அறிவியல் என்ற பெயரில், இயற்கையின் இடையில் புகுந்து அதை குழப்பி எதோ தான்தான் மனிதனை காப்பற்றுவதுபோல ஒரு மாயமான தோற்றத்தை உருவாக்கியுள்ளான் என்றே நான் கருதுகிறேன்!
.
எனவே அறிவியல் என்பது ஒரு அழிக்கும் சக்தியேயன்றி வேறல்ல என்றே நான் கருதுகிறேன்!

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.