மனித தவறுக்கு சூழ்நிலைதான் காரணமா?
- ஒருவன் என் பணத்தை கொள்ளையடித்தான் நான் இவன் பணத்தை கொள்ளையடித்தேன்.
- இவன் என் நண்பனை கொன்றான் நான் இவனை கொன்றேன்.
- என் மனைவிக்கு ஆப்பரேசனுக்கு பணமில்லை எனவே நான் திருடினேன்
இதுபோன்ற அனேக காரணங்களை தவறு செய்பவர்களை உதிர்ப்பது சகஜம்!
ஆனால் தவறு செய்பவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை பாரத்தால் எதையுமே தவறு என்று தீர்மானிக்க முடியாது. ஏனெனில் எல்லோரும் தாங்கள் செய்யும் தவறுக்கு தவறாமல் ஒரு நியாயயமான காரணம் வைத்திருப்பார்கள்
மும்பையில் அனேக உயிர்களை பலிகொண்ட தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி சொன்ன வாக்குமூலப்படி அவன் குடும்பத்துக்கு 1.5லட்சம் பணம் கொடுப்பதாக சொன்னதால் இதுபோல் செய்தேன் என்று சொல்கிறான். அவன் குடும்பம் மிக ஏழ்மையில் இருக்கலாம். ஏன் அவன் வீட்டில் யாருக்கோ ஒரு அறுவை சிகிச்சைக்காக கூட இருக்கலாம் அதற்க்காக இத்தனைபேரை கண்மூடித்தனமாக சுட்டுவிடலாமா?
தவறை நியாயப்படுத்த நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் ஒரு கதை சொல்லலாம்! லஞ்சம் வாங்குபவன் எனது வீட்டில் வயசு பொண்ணு இருக்கிறது வரதட்சனை கேட்கிறார்கள் என்று சொல்லுவான்
என்னுடைய கருத்து என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் விபச்சாரம் செய்ய மாட்டேன்., பிச்சை எடுக்க மாட்டேன், திருடமாட்டேன் எனது கடின உழைப்பிலேயே உண்பேன் என்று பிடிவாதத்துடன் முயன்று முன்னேறிய எத்தனையோபேர் இன்று உலகில் இல்லையா! நேர்மையாக வாழவேண்டும் என்ற உறுதியான எண்ணம் வேண்டும்! எச்சூழ்நிலையிலும் தீமை செய்ய விரும்பாத திடமான மனம் வேண்டும்! அது நிச்சயம் நம்மை அடுத்தவனிடம் கையேந்தாமல் வாழ வைக்கும்!. உண்மையாய் இருப்பவனுக்கு நன்மை நடக்கும் என்றே எல்லா மார்க்கமும் சொல்கின்றன.
எனவே தீமை என்பது எந்த சூழ்நிலையில் செய்தாலும் அது தீமையே!
Post a Comment