Wednesday, December 16, 2009

XX

மரணம் என்பது மனிதனின் முடிவா?


நமக்கு உடல் நலமில்லை என்றால் ஒரு நல்ல மருத்துவரை அணுகுகிறோம், சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேகம் என்றால் ஒரு வக்கீலை அணுகுகிறோம்! ஓரளவுக்கு எல்லாவற்றிலும் பொது அறிவு நமக்கு இருந்தபோதும், அந்த குறிப்பிட்ட துறை பற்றி அதிக ஞானமுள்ளவர்கள் அவர்கள் என்பதால் நாம் அவர்களை அணுகி சரியான உண்மையை அறியவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அதேபோல்

ஆன்மீக காரியங்களில் எல்லா மனிதர்களுக்கும் ஓரளவு அறிவு இருந்தாலும்,
நம்மால் அறியமுடியாத மறைபொருளான காரியங்களை அறிந்துகொள்ள ஆன்மீகத்தில் அதிகம் ஞானம்பெற்ற மனிதர்கள் காட்டிய வழியை அணுகுவது மற்றும் ஆராய்வதுதான் ஏற்றது.

மரணத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது மறித்து திரும்ப பிழைத்தவர்களுக்கும், மரணத்தை வென்ற மகான்களுக்கும், இறைவனிடமிருந்து உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்

ஒரு சுவற்றுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை பார்க்கும் அளவுக்கு பவர் இல்லாத கண்களையும் பிறர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வல்லமை இல்லாத மனதும், எந்த நேரத்தில் பிரியும் என்று கணிக்க முடியாத உயிரும் கொண்டுள்ள நாம் எதையும் நிர்ணயிக்க தகுதியற்றவர்கள் என்று கருதுகிறேன்
.

அமானுஷ்ய சக்திகள் இருகின்றனவா இல்லையா என்பது இதுவரை அறிவியலால் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அப்படியே இல்லை என்று வாதிட்டாலும் அனுபவபட்டவர்கள் சொல்லும் பல உண்மைகளை அசட்டைபன்னுவதும் ஏற்றதல்ல!

.
நம்முடைய வாழ்க்கையிலேயே இதுபோல் அமானுஷ்ய சக்திகளின் செயல்களை அறிந்திருக்கிறோம் அப்படி அறியவில்லை என்பதால் அது உண்மை அல்ல என்று ஆகிவிடாது.
.
கடலை பார்க்காத ஒருவர் கடலே இல்லை என்று வாதிட்டால் அவரை அனுபவமற்றவர் என்றுதான் பொருளே தவிர கடல் இல்லை என்று ஆகிவிடாது.
.
ஒரு இரண்டு மணிநேரம் ஒருமனதோடு தியானம் செய்தால் "நான் என்பது வேறு" "நமது உடல் வேறு" என்பதை நம்மால் அறியமுடியும். சரி, அது கடினமான காரியம் என்றால் மரித்து பிறகு திரும்ப பிழைத்தவர்கள் கூறும் கருத்துக்களை தொகுத்து கூறும் NDAக்களை படித்து பாருங்கள்.
.
‘உடலை விட்ட பின்’ என்ற தலைப்பிடப்பட்ட டாக்டர் ரேமாண்ட்.ஏ.மூடி என்ற
அமெரிக்கரின் ஆய்வுகளைச் சொல்லும் கட்டுரை தமிழில் எம்.எஸ். பிரகாஷ்
எழுதியுள்ளார் அதை படித்து பாருங்கள்
.
கார் விபத்தில் செத்துப் பிழைத்தவர் சொல்வது ‘குறுக்கே வந்த கார் மோதியதும் நான் எங்கோ அடைக்கப்பட்ட இருண்ட வெளியில் வேகமாய்ச் செல்வதுபோல் இருந்தது. திடீர் என்று நான் ஐந்தடி உயரத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் காரைச்சுற்றிக் கூட்டம் கூடுவதையும், என்னுடன் காரில் வந்த என் நண்பன் அதிர்ச்சியுடன் காரின்
இடிபாடுகளிலிருந்து எழுந்து தள்ளாடிக்கொண்டு வருவதையும், என் உடம்பு இடிபாடுகளிடையே சிக்கி இருப்பதையும், அதை வெளியில் எடுக்க சிலர் முயல்வதையும் பார்த்தேன்'.
என்று தொடர்ந்து செல்லும் பலரது மரணஅனுபவம் அதில் உள்ளது!

மனித மூளைக்கு எட்டும் கருத்தை சொல்வது அறிவியல். அதன் அடிப்படயில் செல்லுக்கு உயிர் இருக்கிறது என்கிறோம். அந்த உயிர் என்பது என்ன? அது எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது? .
.
ஒரு மின்சார ரயிலுக்கு உயிர் கொடுப்பது மின்சாரம் என்றால் அது தானாக
வருவது இல்லை! அது எங்கோ உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் பண்ணப்படுகிறது அந்த மின்சாரம் இரயில் வண்டியின் உயிராக இருந்து செயல்படுகிறது! அதன் அடிப்படையில், இயங்கும் ஒவ்வொரு செயற்கை பொருளுக்கு பின்னும் மனிதன் செயல்பாடு இருக்கிறது அதுபோல் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும். உயிர் என்பது எங்கு உற்ப்பத்தி செய்யப்படுகிறது அதன் தொடக்கம் முடிவு என்ன? அதை நம் அறிவால் அறிய முடியவில்லை, எனவே நாம் ஆன்மீகத்தின் துணையை நாடவேண்டியுள்ளது!

.
அநேகரால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக வாதிகள் சொல்லும் கருத்தை ஆராயவேண்டியுள்ளது! அவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் மரணம் என்பது ஒரு முடிவல்ல என்பதை புரியமுடிகிறது .
.
பதினான்கு ஆண்டுகள் தவமிருந்து ஞானம் பெற்ற புத்தரை விடவும், பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுபிரான் சொல்வதை விடவும், பார்த்தனுக்கு சாரதியாக இருந்த கண்ணபிரான் சொல்வதை விடவும் பல்வேறு ரிஷிக்களால் எழுதப்பட்ட வேதங்கள் புராணங்கள் சொல்வதைவிடவும் மேலான கருத்துக்களை நம் மூளை அறிவால் அறிய முடியாது என்றே நான் கருதுகிறேன்.
.
இவர்கள் எல்லோருமே "மரணம் முடிவல்ல" என்றே அறுதியிட்டு சொல்லியுள்ளனர் என்பதை கருத்தில் கொள்க!


Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.