Friday, December 26, 2008

இறைவன் ஒரு சர்வாதிகாரியா?

எல்லோருக்கும் தகப்பனாகிய நம் இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர்!!
.
அவர் எது செய்தாலும் அது அனைத்தும் அடியவர் நன்மைக்கே! நாம் நாளையை பற்றி சிந்திப்போம் அவர் 400 வருடங்களுக்கு அப்பாலும் சித்தித்து செயலாற்றுவார் அது நமது அறிவுக்கு எட்டாததால் அவர் செயலின் ஆழத்தை அறியமுடிவதில்லை
.
இறைவன் தனது உருவாக்கும் வல்லமையால், இன்பத்தால் நிறைத்த இந்த உலகத்தை படைத்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்படி அவன் கண்களுக்கு வாய்க்கு செவிக்கு மற்றும் உடலுக்கு இன்பமானது எல்லாவற்றையும் படைத்து அவனுக்கு ஏற்றாப்போல் துணையையும் படைத்து மனிதன் எல்லையற்ற இன்பத்தை என்றும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் (நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் அவர் படைக்கும்போது இருந்த இன்பத்துக்கும் கொஞ்சமும் நிகர் இல்லை)
.
அந்த இன்பத்தை கெடுக்க ஆதியில் இருந்தே தோன்றி அனைத்தையும் கெடுத்து வரும் அசுத்த சக்திகள் வரும் என்பது ஆண்டவருக்கு முன்பே தெரியும். ஆகினும் அந்த அசுத்த சக்திக்கு பயந்து ஒன்றையும் படைக்காமல் இருப்பதை விட, அசுத்தத்தை அறிந்து விலகி இருக்கும்படி அதீத ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தார்! ஆனால் மனிதன் அந்த ஞானத்தை பயன்படுத்தி தீமையை விலக்காமல் தீமைக்குள் மாட்டிக்கொண்டான். அதனால் வந்த பிரச்சனைகளே இன்று உலகில் நடக்கும் கொடூரங்கள்.
.
இங்கு குற்றம் யாருடையது?
இன்பமாக மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதனை படைத்தது இறைவன் குற்றமா?
அல்லது
தீமையை பகுத்தறியும் அறிவை சரிவர பயன்படுத்தாமல் தீமைக்குள் விழுந்தது மனிதன் குற்றமா?
.
சரி! கண்ணதாசன் சொல்வதுபோல் "கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும்" என்ற கருத்தின்படி மனிதனை படைத்தது இறைவனின் தவறு என்றே வைத்துக்கொண்டாலும், தீமைக்குள் விழுந்த மனிதனை இறைவன் அப்படியே விட்டுவிடவில்லை. அவனை மீட்க தன்னில் ஒரு பங்கை மனிதனாய் பூமிக்கு அனுப்பினார் பாவத்தில் பங்கெடுத்தார் ஆனால் மனிதன் அவர் அழைப்புக்கு செவி கொடாமல் இன்னும் அதிக அதிகமாக விலகி அவர் கண்காணாமல் தங்க எதாவது இடம் கிடைக்குமா என்றுதான் அறைகிறார் தவிர ஆண்டவரை தேட மனமில்லை.
.
இறைவன் அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார் என்னிடம் வா நான் உன்னை விடுவிப்பேன் இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். ஆனால் நாம்தான் அவர் கரத்துக்குள் வர விருப்பமிலாமல் ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம். அகவே இங்கு நடக்கும் துன்பங்களுக்கு எல்லாம் இறைவனே காரணம் என்று இறைவனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
.
அவர் சர்வாதிக்கரியும் அல்ல அவர் எவரும் தன்னை மண்டியிட்டு வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற புகழ் விரும்பியும் அல்ல! உலக இன்ப துன்பத்தில் மூழ்கியிருக்கும் மனிதன் இறைவனை நினைத்து மனதை ஒருமன படுத்துவதன் மூலம் மன அமைதி கிடைக்குமென்பதர்க்க்காகத்தான் தியானமும் பிரார்த்தனையும் கட்டளையிட்டுள்ளார்
.
மேலும் இறைவனை ஓரவஞ்சனை உடையவரல்ல அவரை வணங்காதவனும் இவ்வுலகில் நன்றாகத்தான் வாழ்கின்றனர் அவர்களுக்கும் சூரியன் அதே ஒளியைத்தான் கொடுக்கிறது அதே காற்றுதான் கிடைக்கிறது எனவே இறைவன் எல்லோருக்கும் எப்பொழுதும் நல்லதையே செய்கிறார். மனிதன் தவறு செய்யும்போது ஒளியாகிய இறைவனைவிட்டு விலகுவதால் இருளாகிய தீய சக்திக்கும் மாட்டிக்கொண்டு தண்டனை அடைகிறான்.

ஆன்மீகம்! அறிவியல்! - ஓர் ஒப்பீடு

ஆன்மீகம் என்பது என்ன?
ஆன்மீகம் என்பது அனைத்தையும் படைத்த ஆண்டவரை அறிந்துகொள்ளும் வழி!
.
அறிவியல் என்பது என்ன?
ஆண்டவரின் படைப்புகளை அறிவால் ஆழமாக ஆராய்ந்து அதிலிருந்து புதுமைகள உருவாக்குவது!
.
ஆன்மீகம் அறிவிற்கும், அறிவியலுக்கும் எதிரானதா?
ஆம்! நிச்சயமாக அறிவியல் என்பது ஆன்மீகத்துக்கு எதிரானது. ஏனெனில் இறைவன் படைப்பு எல்லாவற்றிலுமே முழுமையுண்டு! இயற்க்கை சமநிலை உண்டு. ஆனால் மனிதன் தன் சுய நலனுக்காக இயற்க்கையானதை மாற்ற நினைக்கும்போது அந்த சமநிலை கெடுகிறது. அதனால் அகிலம் அழிவை நோக்கி பயணிக்கிறது. அறிவியலால் அனேக நன்மைகள் இருந்தாலும் அதனால் வரும் கெடுதல்கள் அளவிடமுடியாதது அனைத்தையுமே அழிக்கக்கூடியது!
.
அறிவியல் என்பது ஒருவழிப்பாதை. எப்படியெனில் பிளாஸ்டிக் என்ற மக்காத ஒரு பொருளை உருவாக்க தெரிந்த அறிவியலுக்கு அதனால் வரும் கெடுதலை தடை செய்ய முடியாது. அணு ஆயுதத்தை உருவாக்க தெரிந்த அறிவியலுக்கு அது எப்படி முயன்றாலும் அதை ஒழிக்க முடியாது இதுபோல் பல! இன்று நாம் என்னதான் முயன்றாலும் 100 வருடங்களுக்கு முன்னிருந்த ஒரு இயற்க்கை சூழலுக்கு திரும்பி போக முடியாது.
.
அறிவியலின் நோக்கம் என்ன?
அறிவியலுக்கு ஆயிரம் நோக்கம் உண்டு!
அறிவியலின் பல பிரிவுகளாகிய இயற்பியல், உயிரியல், வேதியல், வானவியல், புவியியல் போன்ற ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
.
இயற்பியல் பிரிவு பிக் பேங்க் தியரியை நிரூபித்து புதிய உயிர்கள் உருவானதை அறியவும் அதன் மூலம் இறைவனை பற்றி அறிய நினைக்கிறது. உயிரியல் DNAக்களையும் செல்களையும் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட செல்களை அகற்றி மீண்டும் புதிய செல்களை உடலில் புகுத்துவதன் மூலம் இறைவன் நியமித்துள்ள மரணத்திலிருந்து விடுதலை அடைய வழி உண்டா என்று தேடுகிறது. வானவியல் உலகம் அழிவை நோக்கி போவதால் அதிலிருந்து தப்பித்து தஞ்சமடைய வேறு எதாவது கிரகம் இருக்கிறதா என்பதை ஆராய்கிறது, மருத்துவம் மரணத்தை ஜெயிக்க மருந்துண்டா என்று மகத்தான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது!
.
எல்லாவற்றையும் ஒரே வரியில் சொன்னால் இறைவனின் நியமனத்தை முறியடிக்க முயல்கிறது!
.
ஆன்மீகத்தின் பயன்தான் என்ன? அதன் குறிக்கோள் என்ன?
ஆன்மீகத்தின் பயன் என்ன என்பதை விட ஆன்மீகத்தை தவிர மற்ற அனைத்தும் அறவே பயனற்றது என்று அறுதியிட்டு சொல்லலாம்!
.
இந்த உலகில் நாம் உருவக்கப்படதன் நோக்கம் என்ன! எத்தனையோ கோடி மக்கள் பிறந்து துன்பத்திலும் இன்பத்திலும் உழல்கிறார்கள் பிறகு தன்னைபோல பாடுகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்கிவிட்டு மடிகிரார்களே இது ஏன்? எதற்காக இந்த நியமனம் உள்ளது? இதன் முடிவு என்ன போன்ற எல்லா கேள்விக்கும் பதில் ஆன்மீகத்தில் உண்டு!
எல்லோரும் விரும்பும் எந்நாளும் முடிவில்லாத எந்த ஒரு குறையில்லாத நித்திய பேரின்ப வாழ்க்கையை பெற்றுத்தருவதே ஆன்மீகத்தால் அன்பர்கள் பெரும் மகத்தான நன்மை!
ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒரே சமன்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டி அவசியம் என்ன?
ஆன்மீகத்தையும் அறிவியலும் ஒரே சமன்பாட்டுக்குள் கொண்டுவர அநேகர் விரும்புகின்றனர் ஆனால் அது ஒருபோதும் முடியாது! அறிவியால் இறைவனை அறிய முடிந்தால் பிறகு ஆன்மீகம் என்று ஒன்றும் இல்லை எனவே எதோ ஒன்றுதான் இருக்க முடியும்!
.
அல்லது ஆன்மீகம் மட்டும் மனிதகுலத்திற்குப்போதுமானதா?
ஆம் இதில் சந்தேகமே இல்லை!
நாம் எக்காரணத்துக்காக இவ்வுலகு வந்தோமோ அதை அறிந்து அனைத்தையும் சரியாக செய்துமுடித்து, எக்குறையும் இல்லாத நித்தியத்தை அடையும் வழியை ஆன்மீகம் மட்டுமே காண்பிப்பதால் அது ஒன்றே போதும்! வேறு எந்த வழியில் முயன்றாலும் அது முழுமையில்லாமலே முடியும்!
என்னுடைய எண்ணங்கள் இவை! ஏற்பதும் மறுப்பதும் தங்கள் விருப்பம்! டன்

அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா??

அறிவியல் முறையில் அறிந்துகொள்வது என்பது விளக்குவது மற்றும் நிரூபிப்பது இரண்டையுமே குறிக்கும் அனேக அறிவியல் கோட்பாடுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை அனுமானத்திலேயே இருக்கின்றன. பிக் பேங்க் தியரி ந்ரூபிப்பதில் இன்னும் சிக்கல் தீரவில்லை!
.
இங்கு என்னால் அறவியல் முறைப்படி ஆண்டவரை நிரூபிக்க முடியாது!
.
முழுமையான ஒரு கருத்தின் மூலம், முழுமயல்லாத ஒற்றை விவரிக்க முடியும் ஆனால் முழுமயல்லாத அறிவியல் என்ற கருத்தைக்கொண்டு முழுமையான இறைவனை நிரூபிப்பது இயலுமா?
.
மனிதனை ஆன்மீகமாகவும் அவன் மூளையை அறிவியலாகவும் எடுத்துக்கொண்டால் மனிதன் மண்டையை உடைத்து மூளையை எடுத்து காண்பித்து விடலாம். ஆனால் மூளையை மட்டும் வைத்துக்கொண்டு மனிதனை காண்பிக்க முடியாதது போன்றதே!
.
ஆன்மீகத்தில் விடை தெரியாத கேள்வி இறைவன் எப்படி உருவானார் என்ற ஒன்றே ஒன்றுதான் அதுவும் நம் அறிவுக்கு எட்டவில்லை அவ்வளவுதான். இறைவன் உருவானதர்க்கான காரண கர்த்தாவை அறியும் அறிவு நம்மிடம் இல்லை என்றே கருதுகிறேன்!
.
ஆனால் அறிவியலில் விடைதேரியாதே கேள்வி அநேகம் உண்டு! பல கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட்மல் அனுமானமாகவே உள்ளது! குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்லும் கோட்பாட்டின்படி குரங்கை ஒரு மனிதனாக மாற்றி, அந்த கோட்பாட்டை இன்றுவரை யாரும் நிரூபிக்கவில்லை. குரங்குக்கு இல்லாத பகுத்தறியும் தன்மை மனிதனுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை இல்லை. மரணத்துக்கு பிறகு வாழ்வுண்டா என்ற கருத்தில் இன்னும் அறிவியலார் இருவேறு கருத்துள்ளவராகவே இருக்கின்றனர்.
.
முதன் முதலில் ஆக்சிஜன் அட்மொஸ்பியரில் பாக்டரியா உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் அதற்க்கு எத்தனையோ மிலியன் ஆண்டுகளுக்கு முன்னேயே உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் எப்படி உருவானது என்றும் அறுதியிட்டு அறிவியலால் சொல்ல முடியவில்லை. 00000000000000000 என்ற பூஜ்ய நிலையில் இருந்து 1 என்ற திட அல்லது திரவ அல்லது வாயு பொருள் எப்படி உருவாது என்பதற்கு எங்கும் விடையில்லை! அது தானாக உருவாயிருக்கலாம் என்பதே அனுமானம்.
.
அந்த தானாக உருவானது இறைவன் என்ற அளவில்லா சக்தி என்றும் அதுதான் எல்லாவற்றையும் படைத்தது என்பது ஆன்மீக கருத்து ஆனால் அந்த தானாக உருவானது பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லாம் உருவானது எனது அறிவியல் கருத்து. இதன்படி பார்த்தால் பல கேள்விகள் எழுகின்றன
ஏன் நான்கு தலையுள்ள அல்லது மூன்று காலுள்ள நாய் உலகில் இல்லை ஏன் பகுத்தறிவுள்ள வேறொரு அவய அமைப்புள்ள மனிதனோ அல்லது XXXசோ உருவாகவில்லை. ஏன் நம் கண்முன்னால் உள்ள எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை ஏன் பகுத்தறிவுள்ள குரங்கு இல்லை போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்
.
உலகம் எப்படி தோன்றியது என்று பல்வேறு அறிவியலறிஞர்கள் பல்வேறு கோட்பாடுகளை கூறியுள்ளனர் ஆனால் எதுவும் முழுமையானது அல்ல! கடைசியில் அறிவியல் "கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்" என்ற இரண்டும் கெட்டான் கோட்பாட்டில் முடிவடைகிறது.
.
ஆண்டவரை அறிவியலால் அறிய முடியுமா? நம் நாடு பிரதமர் ஒருவரை சந்திக்க அழைத்தால் அவர் எந்த வழியில் வரச்சொன்னரோ அந்த வழியில் வந்தால் காவலர்கள் உள்ளே அனுமதிப்பார்கள் அவரை தரிசிக்க முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று அவர் அனுமதித்த வழியை விட்டுவிட்டு வேறு வழியில் வந்து அவர் வீட்டை சுற்றி சுற்றி வந்தால் என்ன அறிய முடியும்? "உள்ளே அவர் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், அவரை பார்க்கமுடியும் அல்லது பார்க்க முடியாமலும் போகலாம்" இந்த நிலைதான் வரும்.
.
அதுபோல் இறைவன் அவரை அறிவதற்கு அனேக வழிகளை அனுமதித்துள்ளார் அப்படி வழிகளில் போய் அவரை அறிந்தவர் பலர் அதில் அடியேனும் ஒருவன். அறிந்தவர் சொல்கிறோம் அவர் இருக்கிறார் என்று ஆனால் அனுமதிக்காத வழியில் போகும் அறிவியலார் சொல்கின்றனர் "இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்" என்று!.
.
இந்த இரண்டு நிலையில் நீங்கள் உங்கள் அறிவை வைத்து தேர்வு செய்தால் எதை தேர்வு செய்வீர்கள்?

ஏன் உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும்?

எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ஒருவர் இருக்க வேண்டுமா? என்று கேட்டால் நிச்சயம் வேண்டும்! இல்லையென்றால் எல்லாம் ஒழுங்கு கெட்டுவிடுமே!
.
எல்லாம் ஒரு ஒழுங்கின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருப்பதாலே இறைவன் இருப்பதை அறிவிக்கின்றன.
.
உள்ளதை நிருபிக்க தேவலோக உதாரணம் தேவையில்லை. கண்முன் நடக்கும் காட்சிகளே போதும். இந்த உலகில் ஒரு கம்பனியோ ஒரு தொழில்சாலயோ ஒரு குடும்பமோ, பள்ளியோ சரியாக இயங்க ஒரு காரணகர்த்தா நிச்சயம் உண்டு. செயற்கையாக நடைபெறும் எல்லா செயலுக்கும் பின்னால் ஒரு காரண கர்த்தா உண்டல்லவா? அதுபோல் இயற்கையாக நடைபெறும் எல்லா செயலுக்கும் பின்னால் இறைவன் என்ற காரணகர்த்தா இருக்கிறார் என்பதே எனது கருத்து!
.
மனிதனின் கவனத்தால் கார் கண்ட்ரோலோடு ஓடும்! கண்ட்ரோலை இழந்த கார் கவிழ்வது விடுவதுபோல் கவிழாமல் இந்த உலகம் உருப்படியாக அதன் பாதையில் சுற்றுகிறதென்றால் அது யாராலோ நிர்மாணிக்கப்படுகிறது என்பதுதானே அர்த்தம்
.
மனிதன் எத்தனையோ இயந்திரங்களை உருவாக்கியுள்ளான் எதுவுமே தானாக உருவாகவில்லை. உருவாகிய எதுவும் பராமரிப்பு இல்லையென்றால் பயனற்று போய்விடும். ஆனால் இந்த உலகம் எத்தனையோ கோடி ஆண்டுகளை கடந்தும் இன்னமும் பொலிவுடன் இருக்கிறதென்றால் பரமாரிப்பில்லாமல் முடியுமா?
.
எவ்வளவு அழகான கணினி இருந்தாலும் அதற்க்கு உயிரைக்கொடுக்கும் மின்சாரம் இல்லையென்றால் பயனில்லை அதுபோல் மனிதன் மகாத்தனவனாக இருந்தாலும் உயிர் என்னும் மூச்சு காற்று இல்லையெனில் அவன் ஒன்றுமில்லை! அதை பிடித்து வைத்திருப்பது அவன் கையில் இல்லை! விண்வெளியில் பறக்கும் ராக்கெட்டை கண்ட்ரோல் பண்ண தெரிந்தவனுக்கு தன்ன்ளுள் இருக்கும் உயிரை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவையெல்லாம் இறைவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் உண்மைகள்!
.
பல்வேறு மனிதர்கள் எழுதிய NDEகளை படித்துப்பார்த்தால், மரணம் மனிதனின் முடிவல்ல மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளலாம்!
.
இறைவன் தன்னை ஒழித்துக்கொண்டு இருக்கவில்லை நாம்தான் அவரைவிட்டு விலகி விலகி ஓடுகிறோம். நம்முன் வந்து நான்தான் இறைவனென்று காண்பிக்க அவருக்கு ஒரு உருவமில்லை அவர் ஒரு மாமிசம் அல்ல! அவர் ஒரு வல்லமை அல்லது சக்தி அவரால் நம்மை ஆட்கொள்ள முடியும். நம்முள் வந்து நம்மோடு பேச முடியும். நம்மை நடத்த முடியும். நான்தான் இறைவனென்று அவரால் இயம்பமுடியும்!
.
இப்பொழுது இந்த மாமிச கண் பார்வை சில விதி முறைகளுக்குட்பட்டது! சுவருக்கு பின்னால் இருக்கும் ஒரு பொருளை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது. அதேபோல் இறைவனை காணும் வல்லமை இந்த கண்களுக்கில்லை! அப்படி ஒருவர் இறைவனை என் கண்ணால் கண்டேன் என்றால் அங்கு உண்மையில்லை! இறைவனை உணர அல்லது அறிய வழிகளை வேண்டுமானால் சொல்லலாம்!

நாம் காணும் இந்த உலகம் தானாக உருவானதா?

இந்த உலகம் எப்படி உருவானது என்பது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
.
அறிவியல் அரச்சியாளர்கள் "பெரு வெடிப்பு கொள்கை" என்றொரு கொள்கையை "அதாவது முன்னொரு காலத்தில் நெபுலா என்றொரு மிகப்பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறியதால் தான் இந்த உலகம் மற்றும் எல்லா கோள்களும் உண்டானதாகவும் பின்பு இந்த உலகில் உயிர்கள் தோன்றி தானாக வளர்ந்ததாகவும் பரவலாக நம்புகின்றனர். ஆனால் இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றையும் கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வல்லுனரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
  • நாம் வாழும் இந்த பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப சூரியனில் இருந்து சரியான தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பூமி சூரியனை 23 1/2 டிகிரி சாய்வாக நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருவதால் பருவ காலங்களில் மற்றம் ஏற்படுகிறது.
  • மனிதனின் அத்யாவசிய பொருளான காற்று நீர் எல்லாமே மறு சுழர்ச்சி முறையில் திரும்ப திரும்ப பூமியில் உருவாகி கொண்டே இருக்கிறது.
  • மனிதன் சுவாசிக்கும் காற்றை தாவரங்கள் கொடுக்கின்றன தாவரங்களுக்கு தேவையான காற்றை மனிதன் வெளியிடுகின்றான் இது ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது.
  • இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் தன் இனத்தை பெருக்க திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கும் விதம் மிக மிக அதிசயம். உதாரணமாக எருக்கு செடியை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் காய் சரியாக காற்று அடிக்கும் காலத்தில்தான் வெடித்து சிதறும் அதன் விதையோடு உள்ள பஞ்சு போன்றபொருள் அதை காற்றின் மூலம் பல்வேறு இடத்துக்கு எடுத்து செல்கிறது
  • இதுபோல் ஒவ்வௌன்றும் ஒவ்வொரு விதத்தில் பரவுகிறது இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம்அதுபோல் மனிதன் உருவாக்கப்பட்ட விதமும் ஒரு மிகப்பெரிய அதிசயமே! கண், காதுகளின் அமைப்பு, கைவிரல்கள், பல் தாடைகள் போன்ற மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளின் அமைப்பும் மிக நேர்த்தியாக மனிதனின் தேவைகளை நிறைவேற்ற தகுந்தபடி மிகவும் அதிசயமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு என் ஒரு குழந்தையானது பூமியில் பிறக்கும் முன்னரே அதற்கு தேவையான உணவு அதன் தாயிடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அஹா எவ்வளவு அருமையாக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது இது தானாக உருவனானது என்று சொல்வதில் எந்த உண்மையும் இருக்கவே முடியாது! ஒருவன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு செல் போனை தனது நண்பரிடம் காட்டினார். உடனே அந்த நண்பர் இந்த செல்போன் மிகவும் அழகாக உள்ளது நான் இதுபோல் ஒன்று வாங்க வேண்டும் எது எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டாராம். உடனே செல்போன்காரர் இதை நீங்கள் எங்குமே வாங்க முடியாது. எனது அலுவலகம் பக்கத்தில் ஒரு ஏலக்ட்ரானிக் கம்பனி ஒன்று இருந்தது அது ஒருநாள் திடீர் என்று வெடித்து சிதறியது அப்பொழுது அதில் உள்ள பல பொருட்கள் ஒன்று சோர்ந்து இப்படி ஒரு செல்போன் தானாக உருவாகி எனக்கு பக்கத்தில் வந்து விழுந்தது என்று சொன்னால் எப்படி நம்ப முடியாதோ அதுபோல் உந்த உலகம் ஒரு விபத்தால் தானாக உருவானது என்பது கொஞ்சமும் நம்ப முடியாத ஒரு விஷயம்.
.
இந்த உலகம் என்பது இறைவன் என்ற ஒரு கைதேர்ந்த கலைஞரால் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை!

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.