« Home | அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா?? » | ஏன் உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும்? » | நாம் காணும் இந்த உலகம் தானாக உருவானதா? »

ஆன்மீகம்! அறிவியல்! - ஓர் ஒப்பீடு

ஆன்மீகம் என்பது என்ன?
ஆன்மீகம் என்பது அனைத்தையும் படைத்த ஆண்டவரை அறிந்துகொள்ளும் வழி!
.
அறிவியல் என்பது என்ன?
ஆண்டவரின் படைப்புகளை அறிவால் ஆழமாக ஆராய்ந்து அதிலிருந்து புதுமைகள உருவாக்குவது!
.
ஆன்மீகம் அறிவிற்கும், அறிவியலுக்கும் எதிரானதா?
ஆம்! நிச்சயமாக அறிவியல் என்பது ஆன்மீகத்துக்கு எதிரானது. ஏனெனில் இறைவன் படைப்பு எல்லாவற்றிலுமே முழுமையுண்டு! இயற்க்கை சமநிலை உண்டு. ஆனால் மனிதன் தன் சுய நலனுக்காக இயற்க்கையானதை மாற்ற நினைக்கும்போது அந்த சமநிலை கெடுகிறது. அதனால் அகிலம் அழிவை நோக்கி பயணிக்கிறது. அறிவியலால் அனேக நன்மைகள் இருந்தாலும் அதனால் வரும் கெடுதல்கள் அளவிடமுடியாதது அனைத்தையுமே அழிக்கக்கூடியது!
.
அறிவியல் என்பது ஒருவழிப்பாதை. எப்படியெனில் பிளாஸ்டிக் என்ற மக்காத ஒரு பொருளை உருவாக்க தெரிந்த அறிவியலுக்கு அதனால் வரும் கெடுதலை தடை செய்ய முடியாது. அணு ஆயுதத்தை உருவாக்க தெரிந்த அறிவியலுக்கு அது எப்படி முயன்றாலும் அதை ஒழிக்க முடியாது இதுபோல் பல! இன்று நாம் என்னதான் முயன்றாலும் 100 வருடங்களுக்கு முன்னிருந்த ஒரு இயற்க்கை சூழலுக்கு திரும்பி போக முடியாது.
.
அறிவியலின் நோக்கம் என்ன?
அறிவியலுக்கு ஆயிரம் நோக்கம் உண்டு!
அறிவியலின் பல பிரிவுகளாகிய இயற்பியல், உயிரியல், வேதியல், வானவியல், புவியியல் போன்ற ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
.
இயற்பியல் பிரிவு பிக் பேங்க் தியரியை நிரூபித்து புதிய உயிர்கள் உருவானதை அறியவும் அதன் மூலம் இறைவனை பற்றி அறிய நினைக்கிறது. உயிரியல் DNAக்களையும் செல்களையும் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட செல்களை அகற்றி மீண்டும் புதிய செல்களை உடலில் புகுத்துவதன் மூலம் இறைவன் நியமித்துள்ள மரணத்திலிருந்து விடுதலை அடைய வழி உண்டா என்று தேடுகிறது. வானவியல் உலகம் அழிவை நோக்கி போவதால் அதிலிருந்து தப்பித்து தஞ்சமடைய வேறு எதாவது கிரகம் இருக்கிறதா என்பதை ஆராய்கிறது, மருத்துவம் மரணத்தை ஜெயிக்க மருந்துண்டா என்று மகத்தான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது!
.
எல்லாவற்றையும் ஒரே வரியில் சொன்னால் இறைவனின் நியமனத்தை முறியடிக்க முயல்கிறது!
.
ஆன்மீகத்தின் பயன்தான் என்ன? அதன் குறிக்கோள் என்ன?
ஆன்மீகத்தின் பயன் என்ன என்பதை விட ஆன்மீகத்தை தவிர மற்ற அனைத்தும் அறவே பயனற்றது என்று அறுதியிட்டு சொல்லலாம்!
.
இந்த உலகில் நாம் உருவக்கப்படதன் நோக்கம் என்ன! எத்தனையோ கோடி மக்கள் பிறந்து துன்பத்திலும் இன்பத்திலும் உழல்கிறார்கள் பிறகு தன்னைபோல பாடுகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்கிவிட்டு மடிகிரார்களே இது ஏன்? எதற்காக இந்த நியமனம் உள்ளது? இதன் முடிவு என்ன போன்ற எல்லா கேள்விக்கும் பதில் ஆன்மீகத்தில் உண்டு!
எல்லோரும் விரும்பும் எந்நாளும் முடிவில்லாத எந்த ஒரு குறையில்லாத நித்திய பேரின்ப வாழ்க்கையை பெற்றுத்தருவதே ஆன்மீகத்தால் அன்பர்கள் பெரும் மகத்தான நன்மை!
ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒரே சமன்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டி அவசியம் என்ன?
ஆன்மீகத்தையும் அறிவியலும் ஒரே சமன்பாட்டுக்குள் கொண்டுவர அநேகர் விரும்புகின்றனர் ஆனால் அது ஒருபோதும் முடியாது! அறிவியால் இறைவனை அறிய முடிந்தால் பிறகு ஆன்மீகம் என்று ஒன்றும் இல்லை எனவே எதோ ஒன்றுதான் இருக்க முடியும்!
.
அல்லது ஆன்மீகம் மட்டும் மனிதகுலத்திற்குப்போதுமானதா?
ஆம் இதில் சந்தேகமே இல்லை!
நாம் எக்காரணத்துக்காக இவ்வுலகு வந்தோமோ அதை அறிந்து அனைத்தையும் சரியாக செய்துமுடித்து, எக்குறையும் இல்லாத நித்தியத்தை அடையும் வழியை ஆன்மீகம் மட்டுமே காண்பிப்பதால் அது ஒன்றே போதும்! வேறு எந்த வழியில் முயன்றாலும் அது முழுமையில்லாமலே முடியும்!
என்னுடைய எண்ணங்கள் இவை! ஏற்பதும் மறுப்பதும் தங்கள் விருப்பம்! டன்

Post a Comment

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.