இறைவன் ஒரு சர்வாதிகாரியா?
எல்லோருக்கும் தகப்பனாகிய நம் இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர்!!
.
அவர் எது செய்தாலும் அது அனைத்தும் அடியவர் நன்மைக்கே! நாம் நாளையை பற்றி சிந்திப்போம் அவர் 400 வருடங்களுக்கு அப்பாலும் சித்தித்து செயலாற்றுவார் அது நமது அறிவுக்கு எட்டாததால் அவர் செயலின் ஆழத்தை அறியமுடிவதில்லை
.
.
இறைவன் தனது உருவாக்கும் வல்லமையால், இன்பத்தால் நிறைத்த இந்த உலகத்தை படைத்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்படி அவன் கண்களுக்கு வாய்க்கு செவிக்கு மற்றும் உடலுக்கு இன்பமானது எல்லாவற்றையும் படைத்து அவனுக்கு ஏற்றாப்போல் துணையையும் படைத்து மனிதன் எல்லையற்ற இன்பத்தை என்றும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் (நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் அவர் படைக்கும்போது இருந்த இன்பத்துக்கும் கொஞ்சமும் நிகர் இல்லை)
.
.
அந்த இன்பத்தை கெடுக்க ஆதியில் இருந்தே தோன்றி அனைத்தையும் கெடுத்து வரும் அசுத்த சக்திகள் வரும் என்பது ஆண்டவருக்கு முன்பே தெரியும். ஆகினும் அந்த அசுத்த சக்திக்கு பயந்து ஒன்றையும் படைக்காமல் இருப்பதை விட, அசுத்தத்தை அறிந்து விலகி இருக்கும்படி அதீத ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தார்! ஆனால் மனிதன் அந்த ஞானத்தை பயன்படுத்தி தீமையை விலக்காமல் தீமைக்குள் மாட்டிக்கொண்டான். அதனால் வந்த பிரச்சனைகளே இன்று உலகில் நடக்கும் கொடூரங்கள்.
.
.
இங்கு குற்றம் யாருடையது?
இன்பமாக மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதனை படைத்தது இறைவன் குற்றமா?
அல்லது
தீமையை பகுத்தறியும் அறிவை சரிவர பயன்படுத்தாமல் தீமைக்குள் விழுந்தது மனிதன் குற்றமா?
.
.
சரி! கண்ணதாசன் சொல்வதுபோல் "கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும்" என்ற கருத்தின்படி மனிதனை படைத்தது இறைவனின் தவறு என்றே வைத்துக்கொண்டாலும், தீமைக்குள் விழுந்த மனிதனை இறைவன் அப்படியே விட்டுவிடவில்லை. அவனை மீட்க தன்னில் ஒரு பங்கை மனிதனாய் பூமிக்கு அனுப்பினார் பாவத்தில் பங்கெடுத்தார் ஆனால் மனிதன் அவர் அழைப்புக்கு செவி கொடாமல் இன்னும் அதிக அதிகமாக விலகி அவர் கண்காணாமல் தங்க எதாவது இடம் கிடைக்குமா என்றுதான் அறைகிறார் தவிர ஆண்டவரை தேட மனமில்லை.
.
இறைவன் அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார் என்னிடம் வா நான் உன்னை விடுவிப்பேன் இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். ஆனால் நாம்தான் அவர் கரத்துக்குள் வர விருப்பமிலாமல் ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம். அகவே இங்கு நடக்கும் துன்பங்களுக்கு எல்லாம் இறைவனே காரணம் என்று இறைவனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
.
இறைவன் அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார் என்னிடம் வா நான் உன்னை விடுவிப்பேன் இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். ஆனால் நாம்தான் அவர் கரத்துக்குள் வர விருப்பமிலாமல் ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம். அகவே இங்கு நடக்கும் துன்பங்களுக்கு எல்லாம் இறைவனே காரணம் என்று இறைவனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
.
அவர் சர்வாதிக்கரியும் அல்ல அவர் எவரும் தன்னை மண்டியிட்டு வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற புகழ் விரும்பியும் அல்ல! உலக இன்ப துன்பத்தில் மூழ்கியிருக்கும் மனிதன் இறைவனை நினைத்து மனதை ஒருமன படுத்துவதன் மூலம் மன அமைதி கிடைக்குமென்பதர்க்க்காகத்தான் தியானமும் பிரார்த்தனையும் கட்டளையிட்டுள்ளார்
.
.
மேலும் இறைவனை ஓரவஞ்சனை உடையவரல்ல அவரை வணங்காதவனும் இவ்வுலகில் நன்றாகத்தான் வாழ்கின்றனர் அவர்களுக்கும் சூரியன் அதே ஒளியைத்தான் கொடுக்கிறது அதே காற்றுதான் கிடைக்கிறது எனவே இறைவன் எல்லோருக்கும் எப்பொழுதும் நல்லதையே செய்கிறார். மனிதன் தவறு செய்யும்போது ஒளியாகிய இறைவனைவிட்டு விலகுவதால் இருளாகிய தீய சக்திக்கும் மாட்டிக்கொண்டு தண்டனை அடைகிறான்.
Post a Comment